செல்போன் கடை ஓனரை தாக்கிய கஸ்டமர்.. மீண்டும் தந்தையுடன் வந்து எகிறி எகிறி அடித்த நபர் - பரபரப்பு காட்சி

x

விருத்தாசலத்தில் செல்போன் கடை உரிமையாளர் மீது தாக்குதல் நடத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விருத்தாசலம் பேருந்து நிலையம் அருகே அசோக் என்பவர் செல்போன் கடை நடத்தி வருகிறார். இவரது கடைக்கு வந்த வாடிக்கையாளர் ஒருவர் செல்போனை சர்வீஸ் செய்ய கொடுத்துள்ளார். இந்நிலையில், செல்போனை சர்வீஸ் செய்து கொடுக்க தாமதமானதாகக் கூறி, அந்த வாடிக்கையாளர் தகராறில் ஈடுபட்டு கண்ணாடியை உடைத்துள்ளார். இதில் காயமடைந்த அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், மீண்டும் தனது தந்தையுடன் கடைக்குச் சென்று, அதன் உரிமையாளரை நாற்காலி கொண்டு தாக்கியுள்ளார். இது தொடர்பான சிசிடிவி காட்சிகளைக் கொண்டு போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்