கர்நாடக சட்டமன்றத்தை துரத்தும் சாபம்.. "சும்மா தந்தா கூட அந்த பதவி வேணாம்" - அலறும் தலைவர்கள்.. அச்சம்.. பீதி..

x

கர்நாடகா சட்டமன்ற சபாநாயகர் பதவி ராசியில்லாத பதவி என்று கருதப்படுவதன் பின்னணி பற்றி இந்தத் தொகுப்பு அலசுகிறது.

கர்நாடாக சட்டமன்றத்தின் தற்காலிக சபாநாயகராக, காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ஆர்.வி.தேஷ்பாண்டே நியமிக்கப்பட்டுள்ளார்.

அடுத்த மூன்று நாட்களில் 224 சட்ட மன்ற உறுப்பினர் களுக்கும் இவர் பதவி பிராமணம் செய்து வைக்க உள்ளார். அதன் பிறகு புதிய சபாநாயகருக்கான தேர்தல் நடை பெற உள்ளது.

இது போன்ற சந்தர்பங்களில் சபாநாயகர் பதவியை பெற உருவாகும் போட்டிகள் கர்நாடகாவில் இந்த முறை ஏற்படவில்லை என்பது ஆச்சரியமளிக்கும் செய்தி.

கடந்த 20 ஆண்டுகளாக, சபநாயாகராக பதவி வகித்தவர்கள், அடுத்தடுத்த தேர்தல்களில் தோல்வியுற்று, அவர்களின் அரசியல் வாழ்க்கை அஸ்தமித்துள்ளது தான் இதற்கு காரணம்.

கடந்த வாரம் வரை சபாநாயகராக இருந்த, பாஜகவின் முக்கிய தலைவரான விஸ்வேஷ்வர் ஹெக்டே, சட்டமன்ற தேர்தலில் படுதோல்வியடைந்து, விரக்தி நிலையில் உள்ளார்.

2004ல் எஸ்.எம்.கிருஷ்ணா தலைமையிலான காங்கிரஸ் ஆட்சியில், சபாநாயகராக இருந்த கிருஷ்ணா 2008 தேர்தலில் தோல்வியடைந்தார்.

2008ல் பாஜக ஆட்சியில் அடுத்தடுத்து சபாநாயகர்களாக இருந்த முன்னாள் முதல்வர் ஜகதீஷ் ஷெட்டர் மற்றும் கே.ஜி.போபையா ஆகிய இருவரும், 2023 சட்டமன்ற தேர்தலில் படுதோல்வியடைந்துள்ளனர்.

2013ல் சபாநாயகராக பதவியேற்ற மூத்த காங்கிரஸ் தலைவர் ககோடு திம்மப்பா, 2018 தேர்தலில் தோல்வியடைந்தார். 2016ல் சபாநாயகராக இருந்த கே.பி.கோலிவாட், 2018 தேர்தலில் தோல்விடைந்தார். 2019ல் நடந்த இடை தேர்தலிலும் தோல்வியடைந்தார்.

2018ல், காங்கிரஸ் - மதசார்பற்ற ஜனதா தள கூட்டணி ஆட்சியில் சபாநாயகராக இருந்த ரமேஷ் குமார், 2023 தேர்தலில் படுதோல்வியடைந்துள்ளார்

இந்த வரலாறு ஏற்படுத்தியுள்ள அச்சத்தினால், காங்கிரஸ் தலைவர்கள் யாரும் சபாநாயகர் பதவிக்கு போட்டியிட விரும்பவில்லை என்று கூறப்படுகிறது.

இதனால் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் அமைச்சர் பதவி கொடுக்காவிட்டாலும் பரவாயில்லை, ஆளுநர் பதவி கொடுத்துவிடாதீர்கள் என்று கெஞ்சாத குறையாக கேட்கிறார்களாம்....


Next Story

மேலும் செய்திகள்