ஆபாச வீடியோ எடுத்து மிரட்டிய கொடூரம் - உயிரை விட்ட சிறுமி - நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு..!

x

சென்னையில் வீடுகளில் பேப்பர் போடும் வேலை செய்த குணசீலன் என்பவர், தான் குடியிருந்த வீட்டின் உரிமையாளரின் 13 வயது மகளை ஆபாச வீடியோக்களை எடுத்து, மிரட்டியுள்ளார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த சிறுமி, கடந்த 2020ஆம் ஆண்டு வீட்டின் குளியல் அறையில் தற்கொலை செய்து கொண்டார்.இதையடுத்து, போக்சோ மற்றும் தகவல் தொழில்நுட்ப சட்டங்களின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு குணசீலன் கைது செய்யப்பட்டார். இது தொடர்பான வழக்கை விசாரித்த சென்னை போக்சோ சிறப்பு நீதிமன்ற நீதிபதி ராஜலெட்சுமி, குணசீலனுக்கு இரட்டை ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்தார். மேலும் அவரை சாகும் வரை சிறையில் அடைக்க உத்தரவிட்ட நீதிபதி, மூன்று லட்சம் ரூபாய் அபராதமும் விதித்து, அந்த தொகையை, சிறுமியின் பெற்றோருக்கு வழங்க உத்தரவிட்டுள்ளார்.

அபராதத் தொகையை செலுத்த தவறினால், குற்றவாளி குணசீலனின் அசையும், அசையா சொத்துக்கள் மூலம் அபராத தொகையை வசூலிக்கவும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்