யாரோ சொன்ன ஒரு வார்த்தைக்காக மனைவி, குழந்தையை விட்டு சென்ற கொடூரம் - இப்படியும் ஒரு சைக்கோ கணவனா?

x

தமிழக கேரள எல்லையான கன்னியாகுமரி மாவட்டம் பனச்சமூடை அடுத்த மாங்கோடை சேர்ந்தவர் அனு. இவர் கடந்த 2021 ஆம் ஆண்டு கேரளாவை சேர்ந்த ரஜித் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டுள்ளார். திருமணமான பின்பு ஜாதகம் பெயரில் அனுவை தொடர்ந்து ரஜித் துன்புறுத்தி வந்ததாகவும், செவ்வாய், வெள்ளி ஆகிய நாட்களில் அவரை தீட்டு எனக்கூறி ஒதுக்கி வைத்திருந்ததாகவும் கூறப்படுகிறது. மேலும், ஜோசியரின் பேச்சை கேட்டு, பெண் குழந்தை பிறந்தால் தோஷம் எனக்கூறி மனைவியை சித்ரவதை செய்து வந்த ரஜித், ஆண் குழந்தைதான் வேண்டுமென கூறி மனைவியை துன்புறுத்தியிருக்கிறார். இதனிடையே, அனுவிற்கு பெண் குழந்தை பிறந்த நிலையில், மருத்துவமனையில் வைத்தே மனைவியை விட்டு சென்ற ரஜித், மனைவி மற்றும் குழந்தையை ஏற்க மறுப்பதாகவும், இரண்டாவதாக வேறொரு திருமணம் செய்து கொள்ள முயல்வதாகவும் குற்றச்சாட்டு வைக்கப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்