காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் அலைமோதும் கூட்டம்..ஞாயிற்று கிழமை என்பதால் மீன் வாங்க மக்கள் ஆர்வம்

x

சென்னை காசிமேடு பழைய மீன் பிடி துறைமுகத்தில் சிறிய வகை மீன்களை வாங்க வந்த மீன் பிரியர்களின் கூட்டம் அலை மோதியதுபெரிய வகை மீன்களான வஞ்சிரம் 3000 ரூபாய்க்கு பாறை உள்ளிட்ட மீன்கள் 600 ரூபாய்க்கும் மீன் பிடி சந்தையில் இன்று மீன் விற்பனை செய்யப்பட்டு வருகிறது எப்பொழுதுமே பிடித்து வரும் மீன்களை ஏல முறையில் விற்கப்படும் காசிமேடு மீன் பிடி துறைமுகத்தில் தற்போது விற்பனை செய்யும் பெண்கள் கூற் கட்டி விற்பனை செய்யப்பட்டு வருகிறனர்

கடந்த மாதம் ஏப்ரல் 15 ஆம் தேதி முதல் மீன்பிடி தடைகாலம் துவங்கிய நிலையில் மீன்பிடி துறைமுகத்தில் 2000-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் காசிமேடு மீன் பிடி துறைமுகத்திலேயே நிறுத்தி வைக்கப்பட்டுள்ள நிலையில் சிறிய வகை படகுகளான பைபர் படகுகள் மற்றும் கட்டுமரம் மூலம் குறைந்த தூரம் சென்று மீன்களை பிடித்து வந்து விற்பனை செய்து வருகின்றனர்

இன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் ஏராளமான ஃபைபர் படங்களில் மூலம் மீனவர்கள் மீன்களை பிடித்து வந்த நிலையில் சிறிய வகை மீன்களான சங்கரா, மத்தி, கவலை, கானாங்கத்தை, நவரை, தோல் பாறை, இறால், நண்டு, உள்ளிட்டை மீன்களை வாங்க ஏராளமான மீன் பிரியர்கள் ஆர்வம் காட்டினர் இதனால் பைபர் படங்களில் பிடித்து வரப்படும் மீன்கள் விற்பனை செய்யும் இடத்தில் இன்று அதிகாலை முதல் கூட்டம் நெரிசலாக காணப்பட்டது விலையையும் பொருட்படுத்தாமல் தங்களுக்கு தேவையான மீன்களை வாங்கிச் சென்றனர்

இதேபோன்று திருவள்ளூர் ஆந்திரா உள்ளிட்ட பகுதிகளிலிருந்து வளர்ப்பு மீன்களான கட்லாமீன் , கெண்டை மீன், ஜிலேபி, வளர்ப்பு இறால் ,உள்ளிட்ட வளர்ப்பு மீன்களின் விற்பனையும் காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் இன்று விற்பனைக்கு வந்துள்ளது ஒரு சில அந்த மீன்களையும் வாங்கிச் செல்கின்றனர்


Next Story

மேலும் செய்திகள்