ஆற்றில் இளைஞரை இழுத்து சென்ற முதலை..3 மணி நேரத்திற்கு பிறகு சடலமாக மீட்பு - அதிர்ச்சியில் மக்கள்

x

சிதம்பரம் அருகே முதலையால் இழுத்து செல்லப்பட்ட இளைஞர், சடலமாக மீட்கப்பட்டார். வேலக்குடி பழைய கொள்ளிடம் ஆற்றில் குளித்து கொண்டிருந்த 18 வயது இளைஞர் திருமலையை, முதலை ஒன்று ஆற்றுக்குள் இழுத்து சென்றது. இதுகுறித்து தகவலறிந்த தீயணைப்புத் துறையினர், மீனவர்களுடன் இணைந்து திருமலையை தேடும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்தநிலையில் 3 மணி நேர போராட்டத்திற்கு பிறகு இளைஞர் திருமலை, சடலமாக மீட்கப்பட்டார். இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்