5 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த குற்றவாளி அதிரடி கைது

x

சென்னையை அடுத்த மீஞ்சூரில் கொலை வழக்கில் பிணையில் வந்து, 5 ஆண்டுகளாக நீதிமன்றத்தில் ஆஜராகாமல் தலைமறைவாக இருந்த குற்றவாளியை போலீசார் கைது செய்தனர். கடந்த 2016ம் ஆண்டு, கேசவபுரத்தில் வசித்து வந்த கிருஷ்ணராஜ் என்பவரை கொலை செய்துவிட்டு, அவரிடம் இருந்து இரண்டரை சவரன் தங்கச் செயினை பறித்துச் சென்ற வழக்கில், சண்முகம் என்பவரை போலீசார் கைது செய்தனர்.5 ஆண்டுகளுக்கு முன்பு பிணையில் இருந்து வந்த சண்முகம், நீதிமன்றத்தில் ஆஜராகாமல் தலைமறைவாக இருந்து வந்த நிலையில், வேளாங்கண்ணியில் பதுங்கியிருந்த அவரை, போலீசார் கைது செய்தனர்.


Next Story

மேலும் செய்திகள்