பென் ஸ்டோக்ஸ்க்கு வாழ்த்து தெரிவித்த கிரிக்கெட் உலகம்..!

இங்கிலாந்து டெஸ்ட் கிரிக்கெட் அணியின் கேப்டன் பென் ஸ்டோக்ஸ் இன்று தனது 32வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். கடந்த 2019ம் ஆண்டு 50 ஓவர் உலகக்கோப்பையையும் 2022ம் ஆண்டு டி20 உலகக்கோப்பையையும் இங்கிலாந்து வெல்வதற்கு பெரும் பங்களித்தவர் ஸ்டோக்ஸ்..... ஆஷஸ் தொடரில் ஹெட்டிங்லி டெஸ்ட் போட்டியில் 135 ரன்கள் அடித்து இங்கிலாந்தை ஸ்டோக்ஸ் 1 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற வைத்தது பசுமை மாறாதது. இங்கிலாந்தின் உலகக்கோப்பை நாயகன் ஸ்டோக்ஸ்க்கு சமூக வலைதளங்களில் கிரிக்கெட் உலகம் வாழ்த்து தெரிவித்து வருகிறது.

X

Thanthi TV
www.thanthitv.com