கூட்டத்திற்கு கல்லுடன் வந்த கவுன்சிலர் - அதிகாரிகள் தொடர்ந்து முறைகேட்டில் ஈடுபடுவதாக புகார்

x

சிவகங்கை நகராட்சிமன்ற கூட்டத்தில், அதிகாரிகள் தொடர்ந்து முறைகேட்டில் ஈடுபடுவதாக குற்றஞ்சாட்டி ஆதாரத்திற்காக ஃபேவர் பிளாக் கல்லுடன் கவுன்சிலர் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். திமுகவைச் சேர்ந்த நகர்மன்ற உறுப்பினர் ஜெயகாந்தன், தெருக்களில் பதிக்கப்படும் ஃபேவர் பிளாக் கற்களை அதிகாரிகள் முறையாக ஆய்வு செய்வதில்லை எனக் கூறி ஆதாரத்திற்காக கற்களை கொண்டு வந்தார். இதில் நடந்த வாக்குவாதத்தில், சம்பந்தப்பட்ட அதிகாரி, இனி முறையாக செயலாற்றுவதாக உறுதியளித்தார். இதனிடையே குடிநீர் பிரச்சனை தொடர்பாக விவாதிக்கப்பட்டபோது, திமுக, அதிமுக மற்றும் அமமுக கவுன்சிலர்களிடையே வாக்குவாதம் ஏற்பட்டது.


Next Story

மேலும் செய்திகள்