தாய், குட்டி யானைக்கு வந்த நிலைமை.. இதயத்தை நொறுக்கும் துயர காட்சிகள் - இதை கண்டாவது மனித குலம் திருந்துமா?

x

கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் தாய் மற்றும் குட்டி யானை குப்பை கிடங்கில் பிளாஸ்டிக் கழிவுகளை உண்ணும் காட்சி இணையத்தில் பரவியதையடுத்து, பிளாஸ்டிக் கழிவுகளை 24 மணி நேரத்திற்குள் அகற்ற கேரள உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் சின்னகானல் பஞ்சாயத்திற்கு அப்பகுதியில் குப்பை கிடங்கு உள்ளது. அந்த குப்பை கிடங்கில் பிளாஸ்டிக் கழிவுககளை வனப்பகுதியில் இருந்து வந்த தாய் யானையும் குட்டி யானையும் சாப்பிடும் காட்சி சமூக வலைதளங்களில் வேகமாக பரவியது. இந்த விவகாரம் குறித்து கேரளா உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனு மீது விசாரணை நடைபெற்றது. அப்போது அந்த காட்சிகள் நீதிபதிக்கு போட்டு காண்பிக்கப்பட்டது. இதனை கண்டதும் நீதிபதி, உடனடியாக சம்பந்தப்பட்ட பகுதியில் தேங்கியுள்ள பிளாஸ்டிக் கழிவுகளை 24 மணி நேரத்திற்குள் அகற்றுமாறு உத்தரவிட்டார்.


Next Story

மேலும் செய்திகள்