தடை விதித்த ஆட்சியர் - சாலையில் ஒன்று திரண்ட பெண்கள்
புதுச்சேரியில் குபேர் மீன் அங்காடி முன்பு மீன் ஏலம் விட ஆட்சியர் தடை விதித்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து 100க்கும் மேற்பட்ட பெண்கள் சாலை மறியிலில் ஈடுபட்டனர்.
குபேர் மீன் அங்காடி முன்பு மீன்கள் ஏலம் முடிந்த பிறகு, கழிவுகளை அங்கேயே விட்டுச் செல்வதாக கூறப்படுகிறது. இதனால், சுகாதார சீர்கேடு ஏற்படும் என்பதால், மீன்கள் ஏலம் விட ஆட்சியர் தடை விதித்துள்ளார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த 100க்கும் மேற்பட்ட மீனவ பெண்கள், நேரு வீதியில் சாலை மறியலில் ஈடுபட்டனர். சம்பவ இடத்துக்கு விரைந்த பாஜக எம்எல்ஏ ராமலிங்கம், பெண்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்.
Next Story
