காட்டுத் தீயினால் புகை மண்டலமாக காட்சியளிக்கும் நகரம்... காற்றுமாசுபாடு அதிகரித்துள்ளதால் குடியிருப்புவாசிகளுக்கு எச்சரிக்கை

x

கனடா நாட்டின் அல்பெர்டோ நகரில் ஏற்பட்டுள்ள காட்டுத்தீயினால், நகர் முழுவதும் புகை மண்டலமாக காட்சியளிக்கிறது. இதனை விளக்கும் விதமாக, கல்கேரி என்ற குடியிருப்பு பகுதியில் புகை மண்டலம் சூழ்ந்திருக்கும் காணொலி தற்போது வெளியாகி இருக்கிறது. அந்நகரம் அடைந்துள்ள பாதிப்பு குறித்து விளக்கும் விதமாக, காட்டுத் தீயின் பரவலுக்கு முன்னர் மற்றும் பின்னர் எடுக்கப்பட்ட காணொலி வெளியிடப்பட்டுள்ளன. மேலும், காற்று மாசுபாடு அதிகரித்துள்ளதால், குடியிருப்புவாசிகளுக்கும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே காட்டுத்தீயின் தாக்கத்தால், அந்நகரத்தில் எண்ணெய் உற்பத்தி பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


Next Story

மேலும் செய்திகள்