இந்திய மருந்து கேட்டு அடம்பிடிக்கும் சீனர்கள்... சக்கை போடு போடும் ‘போலி’ இந்திய மருந்துகள்

x

கொரோனா பேரலையில் சிக்கியிருக்கும் சீனாவில் இந்திய மருந்துகள் பெயரில் போலி மருந்துகள் நடமாடுவதாக தகவல் வெளியாகியுள்ளது.

உருமாறிய வைரஸ்கள் வேகமாக பரவும் சீனாவில், லட்சக்கணக்கான மக்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். கொரோனா நோயாளிகளால் மருத்துவமனைகள் நிரம்பி வழியும் சூழலில், சிகிச்சை மருந்துகளை எடுத்துக்கொள்ள பாதிக்கப்பட்டவர்கள் ஆர்வம் காட்டுகிறார்கள். அங்கு பைசர் நிறுவன சிகிச்சை மருந்துகளுக்கு மட்டும் அனுமதி வழங்கப்பட்டுள்ள நிலையில், இந்தியாவின் பிரிமோவிர், பக்ஸிஸ்டா, மொல்நுவன்ட், மோல்நட்ரிஸ் ஆகிய 4 கொரோனா சிகிச்சை மருந்துகள் கள்ளச்சந்தையில் நடமாடுவதாக தகவல் வெளியானது. இப்போது போலியான இந்திய மருந்துகள் அங்கு ஆன்-லைனில் விற்கப்படுவதாக உள்ளூர் மீடியாவான Sixth Tone தகவல் வெளியிட்டுள்ளது. இந்திய மருந்துகளுக்கு சீனா அனுமதி வழங்கவில்லை எனவும், மருந்துகளுக்கு உயிரோட்டம் கொடுக்கும் மூலப்பொருட்கள் இல்லாது போலியான இந்திய மருந்துகள் விற்கப்படுகிறது எனவும் அந்நாட்டு மருத்துவ வல்லுநர்கள் எச்சரிப்பதாக அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதனால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சரியான சிகிச்சை கிடைக்காமல் போகலாம் எனவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்