கர்ப்பிணி சொல்லியும் கேட்காத டாக்டர்கள்.. பிறந்த உடன் மூளைச்சாவு அடைந்த குழந்தை - கலங்கிய தந்தை

திருவாரூர் மாவட்டத்தில் மருத்துவர்களின் அலட்சியத்தால் பிறந்த குழந்தை மூளைச்சாவு அடைந்ததாக கூறி குழந்தையின் தந்தை குற்றம் சாட்டியுள்ளனர்.
x

திருத்துறைப்பூண்டி அருகே பாண்டிக்கோட்டகம் பகுதியை சேர்ந்தவர் மதன். இவரின் மனைவி வினோதினி, கர்ப்பிணியான இவர் பிரசவத்திற்காக திருவாரூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு, காலையிலேயே வயிற்றில் உள்ள குழந்தை எவ்வித அசைவும் இல்லையென வினோதினி மருத்துவரிடத்தில் தெரிவித்துள்ளார். மருத்துவர்கள் அதை பொருட்படுத்தாமல் மாலையில் தான் பிரசவம் பார்த்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து பிரசவத்தின் போது ஆண் குழந்தை பிறந்துள்ளது. இதனை தொடர்ந்து, குழந்தையை கண்ணில் கூட காட்டாமல் தீவிர சிகிச்சை பிரிவிற்கு கொண்டு சென்று செயற்கை சுவாசத்தில் வைத்ததாகவும், பின் குழந்தை மூளைச்சாவு அடைந்ததாகவும் மருத்துவர்கள் கூறியதாக குழந்தையின் தந்தை தெரிவித்தார். தன்னுடைய குழந்தை இறந்ததற்கு மருத்துவர்களின் அலட்சியமே தான் காரணம் என குற்றம் சாட்டினார்.


Next Story

மேலும் செய்திகள்