ரூ 215 கோடி செலவில் "கலைஞர் நூற்றாண்டு நூலகம்" ஜூலை 15இல் முதலமைச்சர் திறந்து வைக்கிறார்.
தமிழக அரசு சார்பில் மதுரையில் கட்டப்பட்டுள்ள 'கலைஞர் நூற்றாண்டு நூலகத்தை, வரும் 15 ஆம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்க உள்ளார்.
மதுரையில் கட்டப்பட்டுள்ள "கலைஞர் நூற்றாண்டு நூலகத்திற்கு, 60 கோடி ரூபாய் மதிப்பில் புத்தகங்கள் வாங்கப்பட்டுள்ளன. ஒட்டுமொத்தமாக கலைஞர் நூலகத்திற்கு 215 கோடி ரூபாய் செலவிடப்பட்டுள்ளது. அனைத்து தரப்பினருக்கும் பயனளிக்கும் வகையில் 4 லட்சத்து 30 ஆயிரம் புத்தகங்கள் இந்த நூலகத்தில் உள்ளன.முழுவதும் குளிர்சாதன வசதி செய்யப்பட்டுள்ள நூலகத்தில், குழந்தைகளுக்கான பொழுதுபோக்கு அம்சங்களும் உள்ளன. மதுரையில் கட்டப்பட்டுள்ள நூலகத்தை, வரும்15-ஆம் தேதியன்று முதல்வர் மு.க ஸ்டாலின் திறந்து வைக்கிறார்.
Next Story
