கடத்தப்பட்டதாக கூறப்பட்ட வழக்கு.. விசாரணையில் குருத்திகா சொன்ன தகவல்

x

தென்காசி இளம்பெண் குருத்திகா பட்டேலிடம் நடந்த விசாரணையில் அவர் பெற்றோருடன் செல்வதாக கூறியுள்ளதாக நீதிபதிகள் தெரிவித்தனர்.

தென்காசி மாவட்டம் இலஞ்சி பகுதியை சேர்ந்த வினித் - குருத்திகா திருமண விவகாரத்தில், பெண் வீட்டாரால் குருத்திகா கடத்தப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது.

கணவர் வினித் தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனுவை விசாரித்த உயர்நீதிமன்ற மதுரைக்கிளை, குருத்திகாவை, 2 நாட்கள் காப்பகத்தில் வைத்து ரகசிய வாக்குமூலம் பெற நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

இந்த நிலையில், இந்த மனு நீதிபதிகள் ஜெயச்சந்திரன், ராமகிருஷ்ணன் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது, குருத்திகா பட்டேலிடம் பெறப்பட்ட விசாரணை அறிக்கையை, சீலிட்ட கவரில், காவல்துறையினர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர்.

அதனைத் தொடர்ந்து. குருத்திகா பட்டேல் இடம் பெறப்பட்ட விசாரணையில், பெற்றோர் உடன் செல்வதாக நீதிபதிகள் தெரிவித்தனர்.


Next Story

மேலும் செய்திகள்