சர்ருன்னு வந்த கார்..மரத்தின் மீது மோதி சிதறிய வாகனம் - பதைபதைக்கும் வீடியோ காட்சி | Car Accident

x

புதுச்சேரியில் கார் விபத்தில் வழக்கறிஞர் உயிரிழந்தது தொடர்பாக, போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். புதுச்சேரி காமராஜர் சாலையில் இன்று அதிகாலை, கார் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து மரத்தின் மீது மோதி விபத்துக்குள்ளானது. உடனடியாக காரிலிருந்து வழக்கறிஞர் அக்‌ஷய் மீட்கப்பட்டு, அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பெற்று வீடு திரும்பிய அவருக்கு, மீண்டும் உடல் நலக்குறைவு ஏற்பட்டதால் மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளார். அங்கு அவரை சோதித்த மருத்துவர்கள், அக்‌ஷய் உயிரிழந்துவிட்டதாக கூறியுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக, போக்குவரத்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்