இறப்பதற்கு முன் வீடியோ வெளியிட்ட கார் டிரைவர் - பகீர் கிளப்பும் பின்னணி

திருவண்ணாமலை மாவட்டம் போளூர் அருகே, நிலப் பிரச்சனைக்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காத‌தால், வீடியோ வெளியிட்டு கார் டிரைவர் தற்கொலை செய்து கொண்ட‌து அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சேத்பட் அண்ணா தெருவிஐ சேர்ந்த மணிகண்டனுக்கும், கருணாகரன் என்பவருக்கும் இடையே நிலம் அளப்பதில் பிரச்சனை இருந்துள்ளது. இதுகுறித்து பலமுறை மனு அளித்தும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காமல் ஒரு சார்பாக செயல்பட்டதாக கூறி, வீடியோ வெளியிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வரும் நிலையில், தற்கொலைக்கு காரணமானோர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மணிகண்டனின் உறவினர்கள் மனு அளித்துள்ளனர்.

X

Thanthi TV
www.thanthitv.com