ஆற்றில் கவிழ்ந்த பேருந்து.. 10 பேர் துடிதுடித்து பலி

x

இலங்கை பொலன்னறுவையில் இருந்து காத்தான்குடி நோக்கி சென்ற பேருந்து, மானம்பிட்டியவில் கொட்டாலிய பாலத்தின் மீது மோதி ஆற்றில் கவிழ்ந்தது. இந்த விபத்தில், 10 பேர் உயிரிழந்த நிலையில், ஏராளமானோர் படுகாயமடைந்தனர். அவர்கள் அனைவரும் மீட்கப்பட்டு, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். உடனடியாக சம்பவ இடத்துக்கு சென்ற போலீசார், விபத்து குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்