பெண்ணை கூட்டு பாலியல் செய்த கொடூரம்... வசமாக சிக்கிய போலீஸ் இன்ஸ்பெக்டர்

x

கேரளாவில் பெண்ணை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் காவல் ஆய்வாளர் கைது செய்யப்பட்டார்

கேரள மாநிலம் கோழிக்கோடு கடலோர காவல்படை ஆய்வாளர் பினு மீது கொச்சியை சேர்ந்த பெண் ஒருவர் பாலியல் வன்கொடுமை புகார் அளித்தார். அதில், தனது கணவர் மோசடி வழக்கில் கைதானது தொடர்பாக கடந்த மே மாதம் சுனுவை சந்தித்ததாகவும், பின்னர் கூட்டாளிகள் 6 பேருடன் இணைந்து கூட்டு பாலியல் வன்கொடுமை செய்ததாகவும் அதிரவைக்கும் புகாரை அளித்தார். இந்த புகாரின் அடிப்படையில், காவல் ஆய்வாளர் சுனுவை கைது செய்த போலீசார், பெண்ணின் கணவரது நண்பர் உட்பட 3 பேரை விசாரித்து வருகின்றனர். வழக்கில் கைது செய்யப்பட்ட காவல் ஆய்வாளர் சுனு, பொறியியல் கல்லூரி மாணவியை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் ஏற்கனவே கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.


Next Story

மேலும் செய்திகள்