ரயிலில் இளைஞர் கழுத்தை நெறித்து துடிக்க துடிக்க கொன்ற கொடூரம்.. தீயாய் பரவும் வீடியோ

x

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் ரயில் பயணத்தின் போது ஆதரவற்ற இளைஞரின் கழுத்தை ஒருவர் நெறித்துக் கொண்டிருக்க, அந்த இளைஞர் பரிதாபமாக உயிரிழந்த வீடியோ இணையத்தில் வேகமாகப் பரவி வருகிறது... 30 வயதான ஜோர்டான் நீலி என்ற நபரை ஒருவர் கழுத்தைப் பிடித்து நெறித்து திணறச் செய்துள்ளார். இதில் நீலி பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் தொடர்பாக முன்னாள் கடற்படை வீரர் போலீசாரால் விசாரிக்கப்பட்டு பின் விடுதலை செய்யப்பட்டதாகத் தெரிகிறது. இந்நிலையில், சம்பந்தப்பட்ட நபரைக் கைது செய்ய கோரிக்கைகள் வலுத்து வருகின்றன.


Next Story

மேலும் செய்திகள்