காதலன் கழுத்தை கரகரவென அறுத்து துடிதுடிக்க கொன்ற அண்ணன்

x

சேலம் மாவட்டம் வாழப்பாடியில் தங்கையை காதலித்த இளைஞரை தனது நண்பர்களுடன் சேர்ந்து அண்ணன் கழுத்தறுத்து கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே துக்கியம்பாளையத்தை சேர்ந்தவர் சக்திவேல். 23 வயதான இவர், கொத்தனராக வேலை பார்த்து வந்த நிலையில், சிறுமி ஒருவரை காதலித்து வந்துள்ளார். இந்த காதல் சிறுமியின் வீட்டுக்கு தெரியவர, காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்ததோடு, சக்திவேலை கடுமையாக கண்டித்துள்ளனர். இந்நிலையில், துக்கியம்பாளையம் அருகே இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த சக்திவேலை, சிறுமியின் அண்ணான சதீஸ்குமார் மறித்து தகராறு செய்துள்ளார். இதில், சதீஸ்குமாரும் அவருடையை உறவினர்களான 17 வயது சிறுவன் மற்றும் புத்தூர் கொண்டலம்பட்டி பகுதியை சேர்ந்த மைக்கேல் ஆகிய மூவரும் சக்திவேலை கழுத்தறுத்து கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதை கண்டு அதிர்ச்சியடைந்த அக்கம்பக்கத்தினர் சக்திவேலின் உடலை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிலையில், அவரின் தாய் போலீசில் புகாரளித்தார். இதனடிப்படையில், விசாரணை நடத்தி வந்த போலீசார், சிறுமியின் அண்ணன் சதீஸ்குமார் மற்றும் 17 வயது சிறுவனை கைது செய்த நிலையில், தலைமறைவான மைக்கேலை வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்