திருமணம் செய்வதாக கூறிய காதலன்.. கடைசியில் பெண்ணுக்கு கொடுத்த ஷாக்

x

சென்னையை அடுத்த மடிப்பாக்கத்தை சேர்ந்த ராகுல் சிராஜ் என்ற 23 வயது இளைஞர் ஒருவர், அதேப்பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவரை காதலித்து வந்துள்ளார்.

மேலும் , அவர் பெண்ணிடம் ஆசை வார்த்தைகளை கூறி, பல முறை பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கியதாகவும் தெரிகிறது.

மேலும் அப்பெண்ணிடம் இருந்து 10 லட்ச ரூபாய் வரை பெற்றுக்கொண்டு அவர், திருமணம் செய்ய மறுத்ததாக தெரிகிறது.

இது தொடர்பாக பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார், நாகர்கோவிலில் பதுங்கியிருந்த ராகுல் சிராஜை கைது செய்து ,சென்னை அழைத்து வந்தனர்.

பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.


Next Story

மேலும் செய்திகள்