தன் உயிரையே பிறந்தநாள் பரிசாக கொடுத்த காதலன்... காதலி சொன்ன அதிர்ச்சி தகவல்

x

சென்னை முகப்பேர் பகுதியை சேர்ந்த சதீஷ் - செல்வராணி தம்பதியின் 19 வயது மகன் மோகன், தனியார் கல்லூரியில் பி.காம் படித்து வந்தார்.

வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில், மோகன் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டதைக் கண்டு, அவரது பெற்றோர் அதிர்ச்சியில் உறைந்து போயினர்.

தகவலின் பேரில் வந்த போலீசார், உடலை மீட்டு பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

தற்கொலைக்கான காரணம் குறித்து கண்டறிவதற்காக, மோகனின் செல்போனை போலீசார் ஆய்வு செய்தபோது, கடைசியாக பேசிய இளம்பெண்ணை அழைத்து விசாரணை நடத்தினர்.

அதில் இருவரும் காதலித்து வந்ததாகவும், தனது பிறந்தநாளுக்கு பரிசு வழங்குவதற்காக, இருவருக்கும் இடையே வழக்கம்போல் சண்டை நடந்ததாகவும் தெரிவித்துள்ளார்.

அப்போது தூக்குபோட்டு தற்கொலை செய்துகொள்ளப் போவதாக பேசிவிட்டு, மோகன் செல்போனை துண்டித்ததாகவும், இவ்வாறு நடக்கும் என தான் எதிர்பார்க்கவில்லை என்றும் அந்த இளம்பெண் தெரிவித்தார்.

இளம்வயதில் கல்லூரி மாணவர் உயிரிழந்தது அப்பகுதியினரிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்