நாய் கடி சிகிச்சைக்கு 3மணி நேரம் காத்திருந்த சிறுவன்! "யாருமே இல்லாத ஆரம்பசுகாதார நிலையம்"

x

திருவள்ளூர் அருகே ஆரம்ப சுகாதார நிலையத்தில், இரவு நேர மருத்துவர்கள் இல்லாததால், நாய் கடி சிகிச்சைக்காக சிறுவன் 2 மணிநேரம் காத்திருக்கும் நிலை ஏற்பட்டது.

பெரியபாளையம் பகுதியைச் சேர்ந்த 8ம் வகுப்பு மாணவன் சேகுவேரா, நேற்றிரவு வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்தபோது, நாய் கடித்துள்ளது. இதையடுத்து, பெற்றோர், சிறுவனை அங்குள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அழைத்து சென்றனர். எனினும், அங்கு மருத்துவர் இல்லாததால், சிறுவனுடன் பெற்றோர் 2 மணிநேரத்திற்கும் மேல் காத்திருந்தனர். பின்னர், வந்த வந்த மருத்துவர் சிறுவனுக்கு சிகிச்சை அளித்தார். அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் இரவு நேரத்தில் மருத்துவர்கள் இல்லாதால், அவசர சிகிச்சைகளுக்காக, திருவள்ளூர் அல்லது சென்னை செல்ல வேண்டியிருப்பதாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.


Next Story

மேலும் செய்திகள்