சக மாணவனை ஸ்கேலால் தாக்கிய சிறுவன்.. அடித்ததில் கிழிந்த கருவிழி.. காயம் ஏற்பட்டதை மூடி மறைத்த ஆசிரியை - கதறும் பெற்றோர்

x

அத்தியூர் கிராமத்தை சேர்ந்தவர் நித்தியானந்தம் என்பவரது மகன் சுதாகர், சிதண்டி மண்டபம் ஊராட்சி தொடக்கப் பள்ளியில் ஐந்தாம் வகுப்பு படித்து வருகிறார். கடந்த பிப்ரவரி மாதம் பள்ளிக்குச் சென்ற சுதாகரை, மோனிஷ் என்ற சக மாணவன், ஸ்கேலை எடுத்து வீசியுள்ளார். இதனால் வலியில் சுதாகர் துடித்த நிலையில், ஆசிரியை இது குறித்து யாரிடமும் வெளியே கூற வேண்டாம் என தெரிவித்துள்ளார். பெற்றோரிடம் கூறாமல் வீட்டிற்சு சுதாகருக்கு வலி அதிகமான நிலையில், பள்ளியில் நடந்த சம்பவத்தை கூறியுள்ளார். இதனிடையே மேல் சிகிச்சைக்காக சென்னையில் உள்ள எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்ட சுதாகரை மருத்துவர்கள் பரிசோதித்தனர். சுதாகர் கண் பார்வை 90 சதவீதம் இழக்க நேரிடும் என மருத்துவர்கள் கூறிய நிலையில், மாணவன் காயமுற்றதை மூடி மறைத்த ஆசிரியை மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்