உடல் சிதறி உ.பி. இளைஞர் பலி - வண்டலூரில் பயங்கரம்

x

வண்டலூர் அடுத்த கீரப்பாக்கம் ஊராட்சி, விநாயகபுரம் பகுதியில், தனியாருக்கு சொந்தமான சிமெண்ட் கற்கள் தயாரிக்கும் தொழிற்சாலை உள்ளது.

இங்கு வெளிமாநிலத் தொழிலாளர்கள் ஏராளமானோர் தங்கள் குடும்பத்தினருடன் தங்கி பணியாற்றி வருகின்றனர்.

இங்கு சுமார் 50 மீட்டர் கொண்ட 8 ராட்சத பாய்லர்கள் உள்ளன.

நேற்றிரவு பணியின்போது ராட்சத பாய்லரை விழுப்புரத்தை சேர்ந்த யுவராஜ் என்பவர் இயக்கிக் கொண்டிருந்தார்.

அப்போது ராட்சத பாய்லர் பயங்கர சத்தத்துடன் வெடித்துச் சிதறியது.

இதில், உத்தரபிரதேசத்தை சேர்ந்த சந்தல் என்பவரின் 18 வயது மகன் மீராஜ் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

யுவராஜ் மற்றும் ஹெக்லத் ஆகிய இருவரும் படுகாயமடைந்தனர்.

அவர்கள் இருவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்