திடீரென தீப்பிடித்து எரிந்த 'படகு வீடு'... அலறியடித்து ஓடிய வெளிநாட்டு சுற்றுலா பயணிகள்

கேரளாவில், படகு வீட்டில் ஏற்பட்ட தீ விபத்தால் பரபரப்பு ஏற்பட்டது. கேரள மாநிலம், ஆலப்புழாவில் இருந்து டிஎஸ் கால்வாய் வழியாக கொல்லம் நோக்கி வந்து கொண்டிருந்த படகு வீடு திடீரென தீப்பிடித்து எரிந்தது. இதில், படகில் இருந்த 3 வெளிநாட்டு சுற்றுலா பயணிகளையும், இரண்டு ஊழியர்களையும் அருகிலிருந்தவர்கள் மீட்டனர். தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

X

Thanthi TV
www.thanthitv.com