ரசிகர்களின் மனதுக்கு மிகவும் நெருக்கமான ஜி.வி.பிரகாஷ்குமார் பிறந்த தினம்... ஜி.வி.பிரகாஷ்-ன் இசையில்லாமல்..?

x

பாடகர், இசையமைப்பாளர், நடிகர் என பன்முக திறமை கொண்ட ஜி.வி.பிரகாஷ்குமார் பிறந்த தினம் இன்று...

இந்த தேசிய விருதை ஜி.வி.பிரகாஷ் பெற்றபோது, தமிழ்நாட்டில் உள்ள பல இளைஞர்கள் தாங்களே இந்த விருதை பெற்றது போல உணர்ந்தனர்.

அந்த அளவுக்கு ரசிகர்களின் மனதுக்கு மிகவும் நெருக்கமானவர் ஜி.வி.பிரகாஷ். சாந்தமான முகம், மெல்லிய புன்னகை இவை இரண்டும் அவரது அடையாளம்.

சிக்கு புக்கு ரயிலேவில் பாடகராக அறிமுகமான ஜி.வி., வெயில் படத்தில் இசையமைப்பாளராக தனது பயணத்தை தொடங்கி, ஆயிரத்தில் ஒருவன் படத்தில் உச்சம் தொட்டார்...ஜி.வி.பிரகாஷ்-ன் இசையில்லாமல் அந்த படத்தை நினைத்து கூட பார்க்க முடியாது.

குறிப்பாக மெலடி பாடல்கள் ஜி.வி.பிரகாஷை இன்னும் பல ரசிகர்களிடம் கொண்டு சென்றது.

அப்பா மகள், அம்மா மகன், கணவன் மனைவி, என உறவுகளுக்கு அர்த்தம் சேர்க்கும் ஏராளமான பாடல்களுக்கு சொந்தக்காரர்.

விஜய், அஜித் போன்ற முன்னணி நடிகர்களின் படங்களிலும் தன்னுடைய முத்திரையை பதித்தார்

டார்லிங் படம் மூலம் ஹீரோவாக களமிறங்கிய பின் கூட, முன்னணி நடிகர்களின் படங்களுக்கும் இசையமைத்து இரட்டை குதிரையில் சவாரி செய்தார்.

சூரரைப்போற்று படத்தின் கையிலே ஆகாசம் பாடலுக்கு கண் கலங்காத ரசிகர்களே இல்லை என சொல்லலாம். ஆயிரத்தில் ஒருவனுக்கு தேசிய விருது எதிர்பார்த்த ஏமாந்த ரசிகர்களுக்கு, சூரரைப்போற்றுவில் கிடைத்த தேசிய விருது ஜெயிச்சுட்டோம் மாறா என ஜி.வி.க்கே சொல்வது போல இருந்தது

இன்னும் தங்கலான், வாடிவாசல், கேப்டன் மில்லர் உட்பட 15 படங்களுக்கு மேல் இசையமைப்பாளராக நம்மை வியப்பில் ஆழ்த்தப்போகும் ஜி.வி.பிரகாஷ் பிறந்த தினம் ஜூலை 13, 1987.


Next Story

மேலும் செய்திகள்