நடு ரோட்டில் நடந்த பிறந்தநாள் கொண்டாட்டம்...போதை கும்பலை தட்டி கேட்டவர் வெட்டி கொலை...

x

சாலையை வழிமறித்து கேக் வெட்டிய கும்பல்...

வழிவிட சொன்னதால் இளைஞர் கொலை...

நடு ரோட்டில் நடந்த பிறந்தநாள் கொண்டாட்டம்...

போதை கும்பலை தட்டி கேட்டவர் வெட்டி கொலை...

நடு இரவில் நடந்திருக்கும் அந்த வெறியாட்டத்தால் வெறிச்சோடி கிடந்தது, அம்பத்தூர் அடுத்துள்ள ஒரகடம்.

வெட்டப்பட்ட தலையுடன், இரத்தத்தில் ஊறி கிடந்தது ஒரு ஆண் சடலம்.

உடலை கைப்பற்றிய போலீசார், உடற்கூறாய்விற்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விட்டு, ஒட்டுமொத்த ஒரகடத்தையும் தங்களது கண்ட்ரோலுக்கு கொண்டு வந்திருக்கிறார்கள்.

கொல்லப்பட்டவர் யார்...? இந்த கொடூரத்தை செய்த கொலையாளிகள் எங்கே...? நடந்திருக்கும் கொலைகான காரணம் என்ன..? போன்ற கேள்விகளுக்கு விடை தேடி காவல்துறை களத்தில் இறங்கியிருக்கிறது.


Next Story

மேலும் செய்திகள்