தமிழகத்தில் சிறந்த பேரூராட்சி கருங்குழி, நகராட்சி ஸ்ரீவில்லிபுத்தூர்!

x

தமிழகத்தில் சிறப்பாக செயலாற்றிய பேரூராட்சிகள் மற்றும் நகராட்சிகளுக்கு முதல்வர் ஸ்டாலின் விருதுகள் வழங்கி சிறப்பித்தார். அந்த வகையில், சிறந்த பேரூராட்சிக்கான முதல் பரிசை செங்கல்பட்டு மாவட்டம் கருங்குழி தட்டிச் சென்றது. முதல் பரிசாக 10 லட்சம் ரூபாய் வழங்கப்பட்டது. 2ம் இடத்தைப் பிடித்த கன்னியாகுமரிக்கு 5 லட்சம் ரூபாயும், 3ம் இடம் பிடித்த சோழ வந்தானுக்கு 3 லட்சம் ரூபாயும் வழங்கப்பட்டது. அதேபோல்,

சிறந்த உள்ளாட்சி அமைப்புகளுக்கான விருதுகளையும் முதல்வர் ஸ்டாலின் வழங்கினார். சிறந்த நகராட்சிக்கான முதல் பரிசைப் பெற்ற ஸ்ரீவில்லிபுத்தூருக்கு 15 லட்ச ரூபாயும், குடியாத்தத்திற்கு 10 லட்சம் ரூபாயும் மற்றும் தென்காசிக்கு 5 லட்ச ரூபாயும் பரிசுத் தொகையாக வழங்கப்பட்டன.


Next Story

மேலும் செய்திகள்