"அதிகாரம் அதிகாரிகளிடமே உள்ளது... அரசுக்கு அவர்கள் ஒத்துழைப்பதில்லை.."சட்டப்பேரவையில் முதல்வர் வேதனை

x

புதுச்சேரியில் ஸ்மார்ட் சிட்டி பணிகளில் அரசு சில முடிவுகள் எடுக்கும்போது, அதிகாரிகள் ஒத்துழைப்பு அளிப்பதில்லை என முதலமைச்சர் ரங்கசாமி வேதனை தெரிவித்துள்ளார்.

சட்டப்பேரவையில் உரையாற்றிய முதலமைச்சர், மாநிலம் என்று சொன்னாலும் புதுச்சேரிக்கு முழு அதிகாரம் இல்லை என்றார். கடந்த ஆட்சி காலத்தில் ஸ்மார்ட் சிட்டி பணிகள் தொடங்கப்படவில்லை என்ற ரங்கசாமி, தாம் ஆட்சிக்கு வந்த பின்னர், மத்திய அரசிடம் வலியுறுத்தி பணிகள் நடைபெற்று வருவதாக கூறினார். ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் தலைவராக உள்ள தலைமைச்செயலரிடம் நிதி அதிகாரம் உள்ளதாகவும் அவர் கூறினார். என்ன பணிகள் நடைபெறுகிறது என்பதை ஆட்சியாளர்களுக்கு தெரிவிப்பதில்லை என்றும், அரசு சில முடிவுகள் எடுக்கும்போது அதிகாரி ஒத்துழைப்பு அளிப்பதில்லை என்றும் முதலமைச்சர் வேதனை தெரிவித்தார். திட்டங்கள் குறித்து ஆட்சியாளர்கள் கேட்ட பின்னரே, தற்போது பணிகள் நடைபெற்று வருவதாகவும் ரங்கசாமி விளக்கம் அளித்தார்


Next Story

மேலும் செய்திகள்