மசூதியில் நடந்த தாக்குதல்... துப்பாக்கிமுனையில் 19 பேர் கடத்தல் - நைஜீரியாவில் அதிர்ச்சி சம்பவம்

நைஜீரியாவில் உள்ள மசூதியில் தாக்குதல் நடத்தி மர்ம நபர்கள் 19 பேரை துப்பாக்கி முனையில் கடத்தி சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கட்சினா மாநிலத்தின் மைகாம்ஜி கிராமத்தில் உள்ள மசூதிக்குள் மாலை தொழுகையின் போது துப்பாக்கியுடன் புகுந்த மர்ம நபர்கள் துப்பாக்கிச் சூடு நடத்தி, தொழுகை நடத்திய "இமாம்" உள்ளிட்ட 2 பேரைக் காயப்படுத்தி, அங்கிருந்து 19 பேரைக் கடத்திச் சென்றுள்ளனர்.

கடத்தல் காரர்களிடம் இருந்து 6 பேர் காப்பாற்றப்பட்ட நிலையில், மீதி 13 பேரை மீட்கும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

இச்சம்பவத்தின் போது காயம் அடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

X

Thanthi TV
www.thanthitv.com