ஆறுமுகசாமி அறிக்கை - அடுத்து நடக்கப்போவது என்ன? - அமைச்சரவை கூட்டத்தில் விவாதம்

x

ஆறுமுகசாமி அறிக்கை - அடுத்து நடக்கப்போவது என்ன? - அமைச்சரவை கூட்டத்தில் விவாதம்


ஜெயலலிதா மரணம் குறித்து சசிகலாவிடம் விசாரணை நடத்துமாறு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

தமிழக அமைச்சரவைக் கூட்டம், முதல்வர் ஸ்டாலின் தலைமையில், தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது.

அதில், முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரிக்க அமைக்கப்பட்ட ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி ஆணையத்தின் அறிக்கை முன்வைக்கப்பட்டு, விவாதிக்கப்பட்டது.

அந்த அறிக்கையில், வி.கே.சசிகலா, சிவகுமார், அப்போதைய சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், அப்போதைய தலைமைச் செயலாளர் ராமமோகன ராவ் ஆகியோரிடம் அரசு விசாரணை நடத்த வேண்டும் என்று பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

இந்த பரிந்துரை தொடர்பாக, சட்ட வல்லுநர்களின் ஆலோசனைகளைப் பெற்று உரிய நடவடிக்கை எடுக்கவும்,

அதன் பிறகு அதற்கான விவர அறிக்கையுடன் ஆணையத்தின் அறிக்கையையும் சட்டப் பேரவையில் வைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்