காமெடியாக மாறிய கைது... அரசுப்பேருந்தால் போலீசாருக்கு ஏற்பட்ட பரிதாபம்... துள்ளிக்குதித்து கிண்டல் செய்த கைதான பா.ஜ.க.வினர் - நடுரோட்டில் அரங்கேறிய சம்பவம்

x

நாகையில் போராட்டத்தில் ஈடுபட்ட பா.ஜ.க.வினரை அழைத்துச் சென்ற அரசுப் பேருந்து பழுதடைந்து நின்றதால் அக்கட்சியினர், போலீசாரை கிண்டல் செய்தபடி கோஷங்கள் எழுப்பினர். நாகை அரசு தலைமை மருத்துவமனை இடமாற்றத்தை கண்டித்து பா.ஜ.க.வினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது கடும் வாக்குவாதம் ஏற்பட்டதால், 100க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்து, அரசுப் பேருந்து மற்றும் போலீஸ் வேனில் ஏற்றி சென்றனர். அரசுப் பேருந்தில் இன்ஜின் கோளாறு ஏற்பட்டு வழியில் நின்றது. அப்போது, பேருந்தை பின்பக்கமாக கை வைத்து போலீசார் தள்ளி நகர்த்தினர். பேருந்தில் இருந்த பாஜகவினர், சினிமா பாணியில், போலீசாரை கிண்டலடித்தனர்.


Next Story

மேலும் செய்திகள்