"ஒன்றரை வருஷமா இதற்காக கஷ்டப்பட்டேன்"..தமிழகத்துக்கு 2வது இடம் பெற்று கொடுத்து தலை நிமிர்ந்து பேட்டியளித்த ஆயுதப்படை காவலர்

x

23வது அகில இந்திய காவலர் துப்பாக்கி சுடுதல் போட்டியில் வெற்றி பெற்ற தனிநபர் மற்றும் அணிகளுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் பரிசுகளை வழங்கினார். 23வது அகில இந்திய காவலர்களுக்கான துப்பாக்கி சுடுதல் போட்டி கடந்த 9ஆம் தேதியிலிருந்து 13ஆம் தேதி வரை செங்கல்பட்டில் நடைபெற்றது. இதில், மொத்தம் 32 அணிகள் கலந்து கொண்டன. தமிழக காவல்துறையினர் சுமார் 12 ஆண்டுகளுக்கு பின்னர் இந்த போட்டியை நடத்தியுள்ளனர். இந்நிலையில், எழும்பூர் ராஜரத்தினம் ஸ்டேடியத்தில் நடைபெற்ற விழாவில், வெற்றி பெற்றவர்களுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் பரிசுகளை வழங்கினார். தமிழக காவல்துறை வரலாற்றிலேயே முதன் முறையாக கைத் துப்பாக்கி சூடுதல் பிரிவு போட்டியில், தமிழக ஆயுதப்படை காவலர் சதி சிவனேஷ் வெற்றி பெற்றார். ஒட்டுமொத்த சாம்பியன்ஷிப் போட்டியில் தமிழ்நாடு 2வது இடத்தை பிடித்து சாதனை படைத்தது. இந்நிலையில், இதில் முக்கிய பங்காற்றிய காவலர் சதி சிவனேஷ், வெற்றி பெற்றது குறித்து மகிழ்ச்சி தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்