இடி போல் இறங்கிய அறிவிப்பு... 100 மருத்துவ கல்லூரிகள் அங்கீகாரம் ரத்து? - அபாய மணி அடிக்கும் Experts

x

நாடு முழுவதும் 2 மாதங்களில் 40 மருத்துவ கல்லூரிகளின் அங்கீகாரம் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதன் பின்னணி குறித்து விரிவாக பார்க்கலாம்....

உலகிலேயே அதிகளவு மருத்துவர்களை உருவாக்கும் நாடாக திகழும் இந்தியாவில், ஆண்டுதோறும் மருத்துவக்கல்லூரி களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.

அந்தவகையில், 2014-ம் ஆண்டில் நாட்டில் 387 ஆக இருந்த மருத்துவ கல்லூரிகளின் எண்ணிக்கை தற்போது

654 ஆக உயர்ந்துள்ளது. இது கிட்டத்தட்ட 69 சதவீதம் அதிகமாகும்.

அதேபோல 2014-ம் ஆண்டு இருந்த இளங்களை மருத்துவ படிப்பு இடங்களின் எண்ணிக்கை 51 ஆயிரத்து 348 ஆக இருந்த நிலையில் தற்போது இந்த இடங்களின் எண்ணிக்கை 99 ஆயிரத்து 763 ஆக அதிகரித்துள்ளது....

இதே போல், 2014ம் ஆண்டு 31 ஆயிரத்து 185-ஆக இருந்த முதுநிலை மருத்துவ படிப்பு இடங்களின் எண்ணிக்கை 107 சதவீதம் அதிகரித்து தற்போது 64 ஆயிரத்து 559 ஆக அதிகரித்துள்ளது.

இந்த நிலையில், நாடு முழுவதும் கடந்த 2 மாதத்தில் 40 மருத்துவ கல்லூரிகளின் அங்கீகாரம் ரத்து செய்யப் பட்டுள்ளன.

தமிழகத்திலும், சென்னை ஸ்டான்லி, திருச்சி மற்றும் தருமபுரி ஆகிய 3 அரசு மருத்துவக் கல்லூரிகளின் அங்கீகாரம் ரத்து செய்யப்படுவதாக தேசிய மருத்துவ ஆணையம் அறிவித்திருந்தது..

ரகசிய கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்படாதது, ஆதாருடன் இணைந்த பயோமெட்ரிக் வருகை பதிவு முறை இல்லாதது, போதுமான எண்ணிக்கையில் பேராசிரியர்கள் இல்லாமை உள்ளிட்ட தேசிய மருத்துவ ஆணையத்தின் விதிமுறைகளை பின்பற்றப்படாததே இதற்கு காரணம் என்று கூறப்படுகிறது.

தமிழ்நாடு, குஜராத், அசாம், பஞ்சாப், ஆந்திரா, புதுச்சேரி, மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களில் தொடர்ந்து ஆய்வுகள் நடத்தப்பட உள்ளதாக தேசிய மருத்துவ ஆணையம் தரப்பில் தகவல்கள் வெளியாகி உள்ளன..

ஆணையத்தின் விதிமுறைகளை ஏராளமான மருத்துவக்கல்லூரிகள் பின்பற்றப்படுவதில்லை என்றும் ஆய்வுகள் தீவிரமடையும் பட்சத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட மருத்துவமனைகள் அங்கீகாரத்தை இழக்க வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.


Next Story

மேலும் செய்திகள்