முன்னாள் அமைச்சரை சந்திக்க சென்ற நடிகை..தாயார் மற்றும் உறவினர்கள் தாக்கியதாக போலீசில் மனு

x

அதிமுக முன்னாள் அமைச்சர் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது மீண்டும் அதே நடிகை புகார் அளித்துள்ள நிலையில், இரு தரப்பினரையும் போலீசில் ஆஜராக கூறி காவல்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

அதிமுக முன்னாள் அமைச்சர் மணிகண்டன், நடிகை ஒருவரை திருமணம் செய்து கொள்வதாக ஏமாற்றிய வழக்கில் சிறை சென்று பின் ஜாமினில் வெளியே வந்திருப்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், வெளியே வந்த மணிகண்டனை நடிகை பல முறை சந்திக்க முயற்சித்ததாக கூறப்படுகிறது. பின் மணிகண்டன் ராமநாதபுரம் வண்டிக்கார தெருவில் உள்ள அவரது வீட்டில் இருப்பதை அறிந்த நடிகை அங்கு சென்றுள்ளார். அப்போது, முன்னாள் அமைச்சர் மணிகண்டனின் தாயார் மற்றும் அவரது உறவினர்கள் நடிகையை தாக்கியதாக கூறப்படுகிறது. இதையடுத்து, நடிகை அருகில் இருந்த காவல் நிலையத்தில் புகாரளித்துள்ளார். இந்த புகாரின் அடிப்படையில் இரு தரப்பினரையும் காவல் நிலையத்தில் நாளை மறுநாள் நேரில் ஆஜராக கூறி போலீசார் நோட்டீஸ் அனுப்பியுள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்