தொலஞ்சே போச்சு..வீடியோ வெளியிட்டு கதறிய மாஸ்டர் பட நடிகை

x

செருப்ப திருடிட்டு போய்ட்டாங்க மக்கா... என நடிகையை புலம்ப வைத்துள்ளனர் இரு இளைஞர்கள்... சென்னை கேகே நகர் பிடி ராஜன் சாலையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருபவர் சங்கீதா... நடிகர் விஜயின் மாஸ்டர், ஆர்ஜே பாலாஜி நடிப்பில் வெளிவந்த வீட்ல விசேஷம் உள்ளிட்ட படங்களில் துணை நடிகையாக நடித்தது மட்டுமல்லாமல், சின்னத்திரையிலும் நடித்து வருகிறார். ஆனால் தற்போது இவருக்கு வந்த சோதனைதான் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது...

துணை நடிகை சங்கீதாவின், வீட்டு வாசலில் இருந்து அவரது காலணிகள் காணாமல் போனதைக் கண்டு திகைத்துள்ளார். இதுதொடர்பாக, அங்கு பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தபோது, 2 இளைஞர்கள், அவரது காலணிகளை திருடிக் கொண்டு லிப்டில் சென்றது தெரியவந்தது. இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த நடிகை சங்கீதா, இதுதொடர்பாக எச்சரிக்கை அளிக்கும் விதமாக, தான் பேசி பதிவு செய்த வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், பாதுகாப்புக்காகத் தான் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருவதாகவும், சாதாரணமாக 2 பேர் உள்ளே நுழைந்து, வாசலில் இருந்த காலணியை திருடிச் சென்றுள்ளதாகவும் வேதனை தெரிவித்தார்.எந்த நோக்கத்துடன் அந்த இளைஞர்கள் இங்கு வந்தார்கள்? எதுவும் கிடைக்காததால் காலணிகளை திருடிச் சென்றார்களா? என்பது தெரியவில்லை என்றும், ஒரு எச்சரிக்கையாய் இருக்க வேண்டியே, இந்த வீடியோவை தான் வெளியிடுவதாகவும் சங்கீதா தெரிவித்துள்ளார்.

வயதான தாய் மற்றும் குழந்தைகளோடு தனியாக வசித்து வருவதால், இந்த சம்பவம் குறித்து காவல்நிலையத்தில் புகார் அளிக்க இருப்பதாக நடிகை சங்கீதா கூறியுள்ள நிலையில், அவ்வாறு அவர் புகார் அளிக்கும் பட்சத்தில், போலீசார் அந்த இரு இளைஞர்களை பிடித்து விசாரித்தால், எதற்காக அடுக்குமாடி குடியிருப்பிற்கு வந்தார்கள் என்ற உண்மை தெரியவரும்....


Next Story

மேலும் செய்திகள்