RTO ஆபீஸ் முன் பேருந்தை நிறுத்தி அரசு ஓட்டுநர் செய்த செயல்...அடுத்து வந்த அதிரடி உத்தரவு

x

நாகர்கோயில் திருநெல்வேலி இடையே இயங்கும் பழுதான அரசு பேருந்தை வட்டார வாகன போக்குவரத்து அலுவலகம் முன்பு நிறுத்திவிட்டு புகார் அளித்த ஓட்டுனர் பணியிடை நீக்கம். போக்குவரத்துக் கழக அதிகாரிகள் நடவடிக்கை

தமிழக அரசு போக்குவரத்து கழகத்தின் கீழ் உள்ள ராணித் தோட்டம் ஒன்றாவது பணிமனையின் கட்டுப்பாட்டில் டி என் 74 என்- 1841 என்ற பதிவெண் கொண்ட பேருந்து திருநெல்வேலி - நாகர்கோவில் வழித்தடத்தில் இயங்கி வருகிறது. இந்தப் பேருந்தை ஓட்டுநர் பெர்க்மான்ஸ் ஓட்டி வருகிறார். கடந்த ஒன்றரை ஆண்டுகளாக இந்த பேருந்தை இவர் ஓட்டி வரும் நிலையில், சமீப சில நாட்களாக பேருந்து பழுதான நிலையில் காணப்பட்டதாக தெரிகிறது. இது குறித்து தொடர்ந்து அதிகாரிகளிடம் அவர் புகார் கூறியும் நடவடிக்கை எடுக்காத நிலையில், நேற்று நாகர்கோவிலில் இருந்து திருநெல்வேலிக்கு சென்று மீண்டும் நாகர்கோவிலுக்கு திரும்பி வந்து கொண்டிருக்கும்போது ஓட்டுவதற்கு கடும் சிரமம் ஏற்பட்டதை தொடர்ந்து நாகர்கோவில் வட்டார போக்குவரத்து அலுவலகத்தின் முன்பு நிறுத்திவிட்டு சாலை போக்குவரத்து அலுவலரிடம் புகார் அளித்தார். தொடர்ந்து போக்குவரத்து கழக அதிகாரிகள் முன்னிலையில் சாலை போக்குவரத்து துறை அதிகாரிகள் பேருந்து ஓட்ட வைத்து ஆய்வு செய்தனர். ஓட்டுனர் பெர்க்மான்ஸ் குறிப்பிடும் அளவுக்கு பேருந்து பழுதாகவில்லை என கூறியதாக தெரிகிறது. இந்நிலையில், ஓட்டுநர் பெர்க்மான்ஸ் ராணித் தோட்டம் பணிமனை நிர்வாகம் பணியிட நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளது. இச்சம்பவம் போக்குவரத்து கழக ஊழியர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

ஏற்கனவே பெர்க்மான்ஸுக்கு வழங்கப்பட்ட மற்றொரு பேருந்தும் பழுதானபோது இதேபோன்று சாலை போக்குவரத்து அலுவலகம் முன்பும் வடசேரி பேருந்து நிலையத்திலும் நிறுத்தி பழுதான அரசு பேருந்துகளின் நிலை குறித்து புகார் கூறினார் என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story

மேலும் செய்திகள்