ஒரு நொடியில் நாட்டை உலுக்கிய விபத்து..இன்னும் அடையாளம் காண முடியாத உடல்கள்..மருத்துவமனையில் காத்துக்கிடக்கும் உறவினர்கள்

x

ஒடிசாவில் ரயில் விபத்து நிகழ்ந்து 6 நாட்களை கடந்தும், பல உடல்கள் இன்னமும் அடையாளம் காண முடியாமல் குளிரூட்டும் அறைகளிலேயே வைக்கப்பட்டுள்ளன. ஒடிசா பாலசோர் மாவட்டத்தில், கடந்த 2ம் தேதி ஏற்பட்ட ரயில் விபத்தில் 288 பேர் உயிரிழந்தனர். பல உடல்கள் சிதைந்த நிலையில் இருப்பதால், அவற்றை அடையாளம் காண்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதனால் மரபணு பரிசோதனை நடத்த முடிவு செய்யப்பட்டது. இதற்காக புவனேஸ்வரில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் உறவினர்கள் குவிந்து வருகின்றனர். சில உடல்கள் மரபணு பரிசோதனை நடத்தப்பட்டு முடிவுகள் வராததால், உடல்களை உறவினர்களிடம் ஒப்படைக்க முடியாத நிலை உள்ளது.


Next Story

மேலும் செய்திகள்