4 வயது சிறுவனுக்கு மடாதிபதி பொறுப்பு | Himachal pradesh

இமாச்சல பிரதேசத்தில் 4 வயதே ஆன சிறுவன் புத்த மடாதிபதியாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். இமாச்சல பிரதேசத்தின் லாஹூல் ஸ்பிதி பகுதியை சேர்ந்த நவாங் தாஷி ரப்தென் என்ற சிறுவனை புத்த மடாதிபதியாக பொறுப்பேற்றுள்ளார். இதற்கு முன்னதாக திபெத்தின் புத்த மடாதிபதியாக இருந்த தாக்லங் செதுல் ரின்போச்சே 2015ம் ஆண்டு உயிரிழந்த நிலையில் கடந்த 7 ஆண்டுகளாக புதிய மடாதிபதி தேர்வு செய்யப்படாமல் இருந்தது. இந்த நிலையில் 4 வயதான நவாங் என்ற சிறுவனை அவரது பெற்றோர் சம்மதத்துடன் புத்த மடாதிபதியாக புத்தத்துறவிகள் தேர்வு செய்துள்ளனர். பின்னர் திபெத்திய மடாலயத்து அழைத்து செல்லப்பட்ட சிறுவனுக்கு புத்த கல்வி போதிக்கப்பட்டு வருகிறது. 

X

Thanthi TV
www.thanthitv.com