12 நிமிடத்தில் 35 செய்திகள் | தந்தி காலை செய்திகள் | Speed News | (28.03.2023)

x
  • அதிமுக பொது குழு தீர்மானங்கள், பொது செயலாளர் தேர்தலுக்கு தடை கோரிய மனுக்கள் மீது, சென்னை உயர் நீதிமன்றம், இன்று காலை 10.30 மணிக்கு தீர்ப்பளிக்க உள்ளது. கடந்த 22-ம் தேதி சிறப்பு அமர்வாக நீதிபதி குமரேஷ் பாபு, இந்த மனுக்களை விசாரித்தார். ஏழு மணி நேர விசாரணைக்கு பின் மனுக்கள் மீதான தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்ட நிலையில், இன்று தீர்ப்பு வழங்கப்பட உள்ளது.
  • மகளிர் உரிமைத் தொகை திட்டத்தால் ஒரு கோடி குடும்பத் தலைவிகள் பயன்பெற உள்ளதாக முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். மகளிர் உரிமைத்தொகை குறித்து சட்டப்பேரவையில் உறுப்பினர்கள் எழுப்பிய கேள்விக்கு விளக்கமளித்த முதலமைச்சர் ஸ்டாலின், நடைபாதையில் வணிகம் செய்திடும் பெண்கள், மீனவ பெண்கள், கட்டுமான தொழில் மற்றும் சொற்ப ஊதியத்தில் பணிபுரியும் பெண்களுக்கு உரிமைத் தொகை வழங்கப்படும் என்று கூறினார்..
  • பழனி அருகே ஆயிரம் ரூபாய் உரிமைத் தொகை பெற தபால் நிலைய சேமிப்பு கணக்கு தொடங்கித் தருவதாக, பெண்களிடம் அஞ்சலக ஊழியர் ஒருவர் தலா 200 ரூபாய் வசூலித்துள்ளார். இந்த தகவல் பரவியதால், அங்கு பெண்கள் திரள தொடங்கினர். மேலும், ஏற்கனவே, வங்கி கணக்கு இருக்கும் போது, அஞ்சலக சேமிப்பு கணக்கு ஏன் தொடங்க வேண்டும் என்றும் பொதுமக்கள் சிலர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
  • தென்காசியில் ஒரே பயிற்சி மையத்தில் படித்த 2 ஆயிரம் பேர் குரூப் 4 தேர்வில் தேர்ச்சி பெற்றதாக தகவல் பரவிய நிலையில், தென்காசி மாவட்டத்தில் 397 பேர் மட்டுமே, தேர்ச்சி பெற்றதாக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் விளக்கம் அளித்துள்ளார்.. டிஎன்பிஎஸ்சி தேர்வில் ஆயிரம் பணியிடங்களுக்கு 24 லட்சம் பேர் போட்டியிடுவதாகவும், கேள்வித் தாள்களுக்கே பல கோடி ரூபாய் செலவு செய்யப்படுவதாகவும் தெரிவித்தார்.
  • குரூப் 4 தேர்வில் முறைகேடுகள் இருந்தால் மறு தேர்வு நடத்தப்பட வேண்டும் என, தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார். இது குறித்த அவரது டுவிட்டர் பதிவில், குரூப் 4 தேர்வில் முறைகேடு என்பது தமிழக இளைஞர்களை அவமதிப்பது போன்றது என கூறியுள்ளார். இது குறித்து தமிழக அரசு தீவிர விசாரணை நடத்த வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்