18 நிமிடத்தில் 35 செய்திகள் | தந்தி காலை செய்திகள் | Speed News | (26.03.2023)

x
  • இந்தியாவின் மிக அதிக எடைக் கொண்ட பிரமாண்ட ராக்கெட், ஒரே நேரத்தில் 36 செயற்கைக்கோள்களுடன் இன்று விண்ணில் பாயவிருக்கிறது. முழுவதும் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்டுள்ள இது, திட, திரவ, கிரையோஜெனிக் என 3 நிலை எரிபொருளால் இயங்கும் என்றும், புவிநிலைச் சுற்றுப்பாதைக்கு 4 டன் எடையை எடுத்து செல்லும் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
  • திண்டுக்கல் லியோனி எழுதிய "வளர்ந்த கதை சொல்லவா" என்ற நூல் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் கலந்து கொண்ட முதல்வர் ஸ்டாலின், லியோனியின் பேச்சும், எழுத்தும் சுவையானது என்றும், தனது நகைச்சுவை பேச்சால் அனைவரையும் வசப்படுத்த கூடிய ஆற்றல் அவருக்கு உண்டு என்பதால், அவரை நாவரசர் என்று சொல்லலாம் என்று புகழாரம் சூட்டினார்.
  • பெங்களூரூவில் தேசிய பயண அட்டையை, பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்துள்ளார். நேஷனல் காமன் மொபைலிட்டி கார்டு, அதாவது ஒரு நாடு, ஒரு மொபைலிட்டி கார்டு திட்டமானது மக்களின் நேரத்தினை மிச்சப்படுத்துவதோடு, அலைச்சலையும் குறைக்கிறது. இதன் மூலம் பல்வேறு போக்குவரத்து வசதிகளையும் பெற முடியும்.
  • கர்நாடகாவில் இரட்டை இயந்திர ஆட்சியை கொண்டு வர முடிவு செய்யப்பட்டுள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். கர்நாடக மாநிலம் தாவனகரேவில், நடைபெற்ற விஜய சங்கல்ப் யாத்திரையில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டார். அப்போது பேசிய பிரதமர் மோடி, கர்நாடக மாநிலத்தின் வளர்ச்சிக்கு நிலையான அரசு தேவை என்றார்.
  • விஜய சங்கல்ப் யாத்திரையில், கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை, முன்னாள் முதல்வர் எடியூரப்பா உடன் ஒரே வாகனத்தில் பிரதமர் மோடி பயணித்தார். பிரதமர் மோடிக்கு பாஜகவினர் மலர்களை தூவி உற்சாக வரவேற்பு அளித்தனர்.
  • கர்நாடகாவில் பிரதமர் நரேந்திர மோடி ஊர்வலமாக வந்த போது பாதுகாப்பு வளையத்தை மீறி இளைஞர் ஒருவர் மோடியின் வாகனத்தை நெருங்க முயன்றார். இதனால் பாதுகாப்பு அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்த நிலையில், இது தொடர்பான வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்