12 நிமிடத்தில் 34 செய்திகள் | தந்தி காலை செய்திகள் | Speed News | (25.03.2023)

x
  • பிரதமர் மோடி மருத்துவ அறிவியல் ஆராய்ச்சி நிறுவனம், பெங்களூரு மெட்ரோ வழித்திடம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களைத் இன்று கர்நாடகாவில் தொடங்கி வைக்க உள்ளார். தனி விமானம் மூலம் பெங்களூரு வரும் பிரதமர் மோடி, அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் நிகழ்ச்சி நடைபெறும் இடத்திற்கு பிரதமர் செல்ல உள்ளார்.
  • ராகுல் காந்திக்கு 2 ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட நிலையில், எம்.பி. பதவியிலிருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். நாடாளுமன்ற மக்களவை செயலகம் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. பிரதமர் மோடி குறித்து அவதூறு பேசியதாக தொடரப்பட்ட வழக்கில் ராகுல்காந்திக்கு 2 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டதை தொடர்ந்து நடவடிக்கை.
  • இந்தியாவின் குரலுக்காக போராட எத்தகைய விலையையும் கொடுக்க தயாராக இருப்பதாக ராகுல்காந்தி கூறியுள்ளார். தகுதி நீக்கத்திற்கு பதிலளிக்கும் வகையில் டிவிட்டரில் பதிவிட்டுள்ள அவர், இந்தியாவின் குரலுக்காக போராடிக்கொண்டிருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.
  • ராகுல் காந்தி மீதான தகுதி நீக்க நடவடிக்கையைத் திரும்பப் பெற வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ராகுல்காந்தியை நாடாளுமன்றத்திற்குள் அனுமதித்தால் ஏற்படும் அரசியல் நெருக்கடிக்கு அஞ்சியே தகுதி நீக்கம் செய்துள்ளதாக விமர்சித்துள்ளார்.
  • ராகுல்காந்தி, ஒரு ஜாதியையே இழிவுப்படுத்தியுள்ளதாக, பாஜக சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார். சென்னையில் பேசிய அவர், அரசியல் சட்டப்படி யாரையும் இழிவு படுத்த முடியாது என்றார். ராகுல்காந்தி பிரதமரை விமர்சிக்கிறார் என்பது தான் வெளியே பேசப்படுவதாக வானதி கூறினார்.
  • ராகுல்காந்தி மீதான தாக்குதல் மூலம், எதிர்கட்சிகளே இருக்க கூடாது என்ற பா.ஜ.க.வின் உண்மை முகம் மக்களுக்கு தெரிந்து விட்டதாக, விடுதலைச்சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். சென்னை விமானநிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், நாடாளுமன்றத்திற்கு ராகுல் வரக்கூடாது என பாஜக திட்டமிட்டுள்ளதாக குறிப்பிட்டார்.
  • ராகுல் காந்தி எம்.பி. பதவியில் இருந்து தகுதிநீக்கம் செய்யப்பட்டதை கண்டித்து, சென்னை காங்கிரஸ் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். தி.நகரில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தை முற்றுகையிட்டு, காங்கிரஸ் கட்சியினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். அவர்களை தடுத்து நிறுத்திய போலீசார், குண்டுகட்டாக தூக்கிக் சென்று கைது செய்தனர்.

Next Story

மேலும் செய்திகள்