10 நிமிடத்தில் 30 செய்திகள்... காலை தந்தி செய்திகள் | Thanthi Morning News | Speed News | (18.03.2023)

x
  • அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல் அறிவித்துள்ள நிலையில், சென்னையில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்திற்கு பாதுகாப்பு கோரி காவல் நிலையத்தில் மனு அளிக்கப்பட்டுள்ளது. அதிமுக அலுவலக மேலாளர் மகாலிங்கம் அளித்த மனுவில், வரும் 27ஆம் தேதி வரை அதிமுக தலைமை அலுவலகத்திற்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.
  • அதிமுக பொதுச்செயலாளர் தேர்தலுக்கான வேட்பு மனு இன்று தொடங்க உள்ள நிலையில், 150 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுள்ளனர். தற்போது, பாதுகாப்பு கோரி அதிமுக சார்பில் மனு அளித்த நிலையில், அசம்பாவிதங்கள் ஏதும் நடக்காமல் இருக்க, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கூடுதலாக நூறு போலீசார் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
  • அதிமுகவிற்கான சட்டங்களை மாற்றி எடப்பாடி பழனிசாமி புதிய சட்டத்தை உருவாக்குவதாக, ஓபிஎஸ் ஆதரவாளர் கு.ப.கிருஷ்ணன் குற்றம் சாட்டியுள்ளார். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், அவசரமாக பொதுச்செயலாளர் தேர்தல் தேதியை அறிவித்தது ஏன் என கேள்வி எழுப்பியுள்ளார். 24 மணி நேரத்தில் வேட்புமனுக்களை தாக்கல் செய்ய முடியுமா எனவும் ஓபிஎஸ் ஆதரவாளர் கேட்டுள்ளார்.
  • அதிமுக பொதுக்குழு தீர்மானங்களுக்கு தடை விதிக்க வேண்டுமென்ற ஓபிஎஸ் தரப்பின் கோரிக்கையை ஏற்க சென்னை உயர்நீதிமன்றம் மறுத்து விட்டது. வழக்கு நிலுவையில் உள்ள போது பொதுச்செயலாளர் தேர்தல் நடத்தப்பட கூடாது என ஓபிஎஸ் தரப்பு வாதம் செய்தது. இது இந்த வழக்குடன் தொடர்புடையதல்ல என்பதை சுட்டிக் காட்டிய நீதிபதி, விசாரணையை வரும் ஏப்ரல் 11- ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தார்.
  • தமிழ்நாடு உள்ளிட்ட 7 மாநிலங்களில், பிரதமர் மித்ரா மெகா ஜவுளிப்பூங்கா அமைக்கப்படும் என, பிரதமர் மோடி அறிவித்துள்ளார். இதற்காக பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்துள்ள முதலமைச்சர் ஸ்டாலின், தென் தமிழ்நாட்டில் ஜவுளித்துறை வளர்ச்சிக்கு இது ஊக்கமாக அமையும் எனக் கூறியுள்ளார். ஜ வுளி பூங்கா அமைக்க, விருதுநகரை தேர்வு செய்ததற்கு முதல்வர் நன்றி தெரிவித்துள்ளார்.
  • சென்னையின் பல்வேறு பகுதிகளில் இரண்டாவது நாளாக மழை பெய்தது. குறிப்பாக, அண்ணாசாலை, எழும்பூர், தேனாம்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் சாரல் மழையும், வள்ளுவர்கோட்டம், நுங்கம்பாக்கம், காமராஜர் சாலை, சேப்பாக்கம், ராயப்பேட்டை, ஆர்.கே.சாலை, ஆழ்வார்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் மிதமான மழையும் பெய்தது.
  • தென்காசி மாவட்டத்தில் இடி தாக்கியதில் தென்னை மரம் தீப்பற்றி எரிந்தது. தென்காசி மாவட்டம், செங்கோட்டை மற்றும் சுற்றுவட்டார பகுதியில் பலத்த மழை பெய்தது. இதில் செங்கோட்டை வனத்துறை சோதனைசாவடி அருகே அமைந்துள்ள தென்னை மரத்தில் இடி தாக்கி தீப்பற்றி எரிந்தது.

Next Story

மேலும் செய்திகள்