14 நிமிடத்தில் 40 செய்திகள்... தந்தி காலை செய்திகள் | Thanthi Morning News | Speed News | (17.03.2023)

x
  • தமிழகம் முழுவதும் பால் உற்பத்தியாளர்கள் இன்று முதல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். பால் கொள்முதல் விலையை உயர்த்தக்கோரி இந்த போராட்டம் நடைபெற்று வருகிறது. முதல்வர் பேச்சு வார்த்தைக்கு அழைத்தால் போராட்டம் தற்காலிகமாக நிறுத்தப்படும் என பால் உற்பத்தியாளர்கள் சங்கம் அறிவித்துள்ளனர்.
  • பால் உற்பத்தியாளர்களின் போராட்டம் காரணமாக, பொதுமக்களுக்கான ஆவின் பால் விநியோகத்தில் எந்த பாதிப்பும் ஏற்படாது என்று பால்வளத்துறை அமைச்சர் நாசர் உறுதி அளித்தார். தந்திடிவிக்கு தொலைபேசி வாயிலாக பேசிய அமைச்சர், ஒருசில சங்கங்கள் மட்டுமே பால் நிறுத்த போராட்டம் அறிவித்திருப்பதாக கூறினார்.
  • பால் உற்பத்தியாளர்கள் பால் நிறுத்த போராட்டம் அறிவித்துள்ள நிலையில், ஈரோடு ஆவின் பால் பண்ணையில் இருந்து வழக்கம்போல் வாகனங்கள் இயக்கப்பட்டன. பச்சை மற்றும் ஆரஞ்சு நிற பால் பாக்கெட்டுகளை எடுத்துச் செல்லும் வாகனங்கள், அதிகாலை முதல் வழக்கம்போல் இயக்கப்பட்டன.
  • சென்னையில் பெரும்பாலான இடங்களில் இன்று அதிகாலை பரவலாக மழை பெய்தது. அண்ணாசாலை, எழும்பூர், தேனாம்பேட்டை, வள்ளுவர்கோட்டம், நுங்கம்பாக்கம், காமராஜர் சாலை, சேப்பாக்கம், கிண்டி, போரூர் உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்தது. திடீர் மழையால் குளிர்ச்சியான சூழல் நிலவுகிறது.
  • தமிழகத்தின் பல்வேறு பகுதியில் பரவலாக மழை பெய்தது. தேனி-பெரியகுளம், அதன் சுற்றுவட்டார பகுதிகள், தென்காசி-கடையம், ஆழ்வார்குறிச்சி, பொட்டல்புதூர் மற்றும் சுற்றுப்பகுதிகள், ஓசூர்-அதன் சுற்றுவட்டாரப் பகுதிகள், ஈரோடு-புஞ்சை புளியம்பட்டி சுற்றுப்பகுதிகளில் மழை பெய்ததால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

Next Story

மேலும் செய்திகள்