16 நிமிடத்தில் 47 செய்திகள்... தந்தி காலை செய்திகள் | Thanthi Morning News | Speed News | (16.03.2023)

x
  • குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு கேரளா, தமிழ்நாடு, லட்சத்தீவில் இன்று முதல் 21ஆம் தேதி, வரை சுற்றுப் பயணம் மேற்கொள்கிறார். வரும் 18ஆம் தேதி, கன்னியாகுமரி வருகை தரும் அவர், விவேகானந்தர் மண்டபம், திருவள்ளுவர் சிலை உள்ளிட்ட இடங்களை பார்வையிட உள்ளார்.
  • இந்தியா முழுவதும் H3N2 இன்ஃப்ளுயன்சா அறிகுறிகளுடன் சிகிச்சை பெறும் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. கேரளாவில்13 பேருக்கும், ஒடிசாவில் 59 பேருக்கும் H3N2 பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மகாராஷ்டிர மாநிலத்தில் மொத்தம் 352 பேர் H3N2 வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • புதுச்சேரியில் 6 குழந்தைகள் உள்பட 12 பேர் வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருப்பதாக அந்த மாநில சுகாதாரத்துறை இயக்குநர் ஸ்ரீராமலு தெரிவித்துள்ளார். பருவநிலை மாற்றத்தால் அனைவருக்கும் வைரஸ் காய்ச்சல் பாதிப்பதாகவும், மக்கள் அச்சப்பட வேண்டாம் எனவும் கேட்டுக்கொண்டுள்ளார்.
  • வைரஸ் காய்ச்சல் பரவல் எதிரொலியாக, புதுச்சேரியில் ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, வரும் 26ஆம் தேதி வரை மொத்தம் 11 நாட்கள் விடுமுறை அளிக்கப்படுவதாக சட்டப்பேரவையில் கல்வி அமைச்சர் நமச்சிவாயம் அறிவித்துள்ளார்.
  • காய்ச்சல் அதிகம் பரவும் நிலை ஏற்பட்டால் மட்டுமே, தமிழ்நாட்டில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிப்பது குறித்து ஆலோசிக்கப்படும் என மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், சாதாரண காய்ச்சலுக்கு விடுமுறை அளிப்பது நன்றாக இருக்காது என கூறினார்.
  • 12ஆம் வகுப்பு தமிழ் பாடத் தேர்வுக்கு வராத 49,000 மாணவர்கள், நேற்று நடந்த ஆங்கில தேர்வுக்கும் வரவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர்கள் அனைவரும் 11-ம் வகுப்பு தேர்வில் தோல்வி அடைந்தவர்கள் என்பதும் தெரிய வந்துள்ளது. பதினோராம் வகுப்பில் தோல்வி அடைந்தாலும், 12-ம் வகுப்பு பொதுத் தேர்வையும் எழுதலாம் என்பதால், இரண்டையும் எழுத வேண்டிய நெருக்கடிக்கு 50 ஆயிரம் மாணவர்கள் தள்ளப்பட்டுள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்