Today Headlines | மதியம் 1 மணி தலைப்புச் செய்திகள் (23.03.2023) | 1 PM Headlines | Thanthi TV

x
  • தமிழக சட்டப்பேரவையில் ஆன்லைன் ரம்மி தடைச் சட்ட மசோதா மீண்டும் நிறைவேற்றம்.... ஒரு மனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாக, சபாநாயகர் அப்பாவு அறிவிப்பு....
  • 2 நாள் பயணமாக டெல்லி புறப்பட்டுச் சென்றார், தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி.... ஆன்லைன் ரம்மி தடைச்சட்ட மசோதா மீண்டும் நிறைவேற்றப்பட்ட நிலையில், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்திக்க இருப்பதாக தகவல்...
  • ஆன்லைன் விளையாட்டு நிறுவனர்களை ஆளுநர் சந்தித்தது ஏன்? என தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் கேள்வி..... மத்திய அரசு ஆளுநரை திரும்பப் பெற வேண்டும் எனவும் பேரவையில் வலியுறுத்தல்
  • பேரவையில் ஆளுநரை பற்றி விமர்சனம் செய்ததாக, பாஜக சட்டமன்றக் குழு தலைவர் நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு..... அரசியல் சட்டப்படி ஆளுநர் செய்த தவறை விமர்சிப்பது அவரவர் உரிமை என அவை முன்னவர் துரைமுருகன் பதிலடி.....
  • பேரவையில் தாக்கல் செய்யப்பட்ட ஆன்லைன் ரம்மி தடைச் சட்ட மசோதாவிற்கு அதிமுக ஆதரவு.... எந்த மாநில சட்டமன்றமாக இருந்தாலும், சட்டம் இயற்ற உரிமை உள்ளது என தளவாய் சுந்தரம் பேச்சு

Next Story

மேலும் செய்திகள்