Today Headlines | மதியம் 1 மணி தலைப்புச் செய்திகள் (22.03.2023) | 1 PM Headlines | Thanthi TV

x
  • திருவாரூரில், ஜூன் 3ம் தேதி கருணாநிதி நூற்றாண்டு விழா தொடக்க மாநாடு.... திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் தீர்மானம்....
  • அதிமுக பொதுக்குழு தீர்மானங்கள், பொதுச் செயலாளர் தேர்தலை எதிர்த்த வழக்கில், உயர்நீதிமன்றம் விசாரணை..... கட்சியின் உறுப்பினர்கள் பட்டியலை வெளியிட்டு பொதுச்செயலாளர் தேர்தலில் போட்டியிட அனுமதித்தால், வழக்கை திரும்பப் பெற தயார் என ஓ.பி.எஸ் தரப்பு வாதம்....
  • கொரோனா தொற்றில் இருந்து பூரண குணமடைந்தார், ஈ.வி.கே.எஸ் இளங்கோவன்.... தனியார் மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை.
  • மகளிருக்கான ஆயிரம் ரூபாய் உரிமைத் தொகை குறித்து அவதூறு வீடியோ வெளியிட்டவர் கைது..... மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் போலீசார் அதிரடி.....
  • பரந்தூரில் விமான நிலையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து 5வது முறையாக ஏகனாபுரம் கிராம மக்கள் தீர்மானம்... உலக தண்ணீர் தினத்தை ஒட்டி நடைபெற்ற கிராம சபைக் கூட்டத்தில் நிறைவேற்றினர்.....
  • முல்லைப்பெரியாறு அணையில் வருகிற 27ம் தேதி கண்காணிப்பு குழுவினர் ஆய்வு..... அணையின் நீர்மட்டத்தை 152 அடியாக உயர்த்த நடவடிக்கை எடுக்கப்படுமா என எதிர்பார்ப்பு....

Next Story

மேலும் செய்திகள்